/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கும்மிருட்டான மேம்பாலம் 3 மாதமாக தொடரும் அவலம்
/
கும்மிருட்டான மேம்பாலம் 3 மாதமாக தொடரும் அவலம்
ADDED : ஏப் 22, 2024 01:30 AM

ஆவடி:பட்டாபிராம்- தண்டுரை ரயில்வே மேம்பாலம் 2010ல் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில், மின் விளக்குகளை ஆவடி மாநகராட்சி பராமரித்து வருகிறது.
சென்னை -- திருத்தணி நெடுஞ்சாலையில், ஆறு ஆண்டுகளாக பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணிகள் நடப்பதால், பெரும்பாலான வாகனங்கள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றன.
தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன.
ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக, 40க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் கும்மிருட்டாக மாறும் மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் அரங்கேறுகின்றன.
கடந்த மார்ச் மாதம், இருசக்கர வாகனத்தில் மேம்பாலத்தில் சென்ற இளைஞர் மீது, கனரக வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால், லாரியில் சிக்கிய இளைஞரின் உடலை மீட்க முடியாமல் போலீசார் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மின் விளக்குகளை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

