/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலைக்கு அடியில் போக்கு கால்வாய் பருவமழைக்கு முன் முடிக்க திட்டம்
/
சாலைக்கு அடியில் போக்கு கால்வாய் பருவமழைக்கு முன் முடிக்க திட்டம்
சாலைக்கு அடியில் போக்கு கால்வாய் பருவமழைக்கு முன் முடிக்க திட்டம்
சாலைக்கு அடியில் போக்கு கால்வாய் பருவமழைக்கு முன் முடிக்க திட்டம்
ADDED : ஆக 19, 2024 02:35 AM

மூவரம்பட்டு ஏரியில் இருந்து மடிப்பாக்கம் ஏரிக்கும், கீழ்க்கட்டளை - நாராயணபுரம் ஏரி போக்கு கால்வாய்க்கும் இணைப்பு கொடுக்க, 31 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணி நடந்து வருகிறது.
பொதுநலச்சங்கங்களின் தொடர் முயற்சி மற்றும் நம் நாளிதழின் படத்துடன் கூடிய தொடர் செய்திகள் காரணமாக, இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணி மேற்கொள்ளும், நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மூவரசம்பட்டில் சாலைக்கு அடியில் போக்கு கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. ருக்மணி நகர், மேடவாக்கம் பிரதான சாலை வழியாக மடிப்பாக்கம் ஏரிக்கு, இந்த போக்கு கால்வாய் கட்டப்படுகிறது.
மேடவாக்கம் பிரதான சாலை போக்கு கால்வாயுடன், கீழ்கட்டளை - நாராயணபுரம் ஏரி போக்கு கால்வாயை இணைப்பு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இரு கட்டங்களாக நடக்கும் இத்திட்டத்திற்காக, 31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டத்தில், மூவரசம்பட்டு - மடிப்பாக்கம் ஏரிக்கு இடையே 840 மீட்டர் துாரம், 2 மீட்டர் அகலம், 1.8 மீட்டர் உயரத்தில் போக்கு கால்வாய்அமைக்கும் பணியில், 300 மீட்டர் பணி முடிக்கப்பட்டு உள்ளது. 100 மீட்டருக்கு கட்டுமானப் பணி நடக்கிறது.
அதேபோல் நீர் திசை திருப்பி எனும் ரெகுலேட்டர் அமைக்கும் பணி, 15 நாட்களில் முடிக்கப்படும். பருவமழை துவங்குவதற்குள், முதற்கட்ட பணிகள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, மேடவாக்கம் பிரதான சாலையில் இருந்து கீழ்க்கட்டளை நாராயணபுரம் போக்கு கால்வாய் வரை, 860 மீட்டர் துாரத்திற்கு போக்கு கால்வாய் அமைக்கும் பணி துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- - நமது நிருபர் --

