/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திக்க தயார் முதல்வர் உறுதி
/
எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திக்க தயார் முதல்வர் உறுதி
எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திக்க தயார் முதல்வர் உறுதி
எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திக்க தயார் முதல்வர் உறுதி
ADDED : ஆக 06, 2024 12:31 AM
சென்னை, ''சென்னையில் எப்படிப்பட்ட மழை வந்தாலும், அதை சந்திக்க அரசு தயாராக உள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கொளத்துார் தொகுதியில், பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. முதல்வரின் தொகுதியான இங்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று, ஆய்வு செய்தார்.
சீனிவாச நகர், 3வது பிரதான சாலையில், சென்னை மாநகராட்சி துவக்க பள்ளி கட்டடத்திற்கு, அடிக்கல் நாட்டினார்.
கணேஷ் நகர் துணை மின் நிலையம், வீனஸ் நகர் கழிவுநீர் வெளியேற்று நிலைய செயல்பாடு, சி.எம்.டி.ஏ., வாயிலாக கட்டப்படும் நவீன சந்தை, தணிகாசலம் நகர் கால்வாய் மேம்படுத்தும் பணி ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
மேலும், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை கட்டடம் கட்டுமானம் உள்ளிட்ட, 355 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் பணிகளை, முதல்வர் ஆய்வு செய்தார்.
பின், இது மட்டுமின்றி, 8.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களையும், முதல்வர் துவக்கி வைத்தார்.
பின், அவர் கூறியதாவது:
தமிழகத்தில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள, அரசு தயாராக உள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளது.
சென்னையில் தற்போது எங்கும் மழைநீர் தேங்கவில்லை. சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குகிறது என, ஓரிடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்டவேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.