/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துவங்கியது பேருந்து நிலைய கட்டுமானம் இனி 'டிப்போ'வில் இருந்து பஸ்கள் இயக்கம்

ADDED : ஆக 05, 2024 01:15 AM

எண்ணுார், எண்ணுார் பேருந்து நிலையம் சேதமடைந்து, பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இது குறித்த புகார்களை அடுத்து, தொகுதி மேம்பாட்டு நிதி 1.50 கோடி ரூபாய், சென்னை மாநகராட்சி 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 1.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கட்டுமான பணிக்கான பூமி பூஜை போடப்பட்டது. ஆனால், பணிகள் துவங்கப்படவில்லை.
இந்த நிலையில், எண்ணுார் மக்கள் நலச்சங்கம் சார்பில், சில தினங்களுக்கு முன் கத்திவாக்கம் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் உள்ளிட்டோர், பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து, பணிகளை முடுக்கி விட்டனர், ஒருவழியாக பழைய பேருந்து நிலையத்தை இடித்து அகற்றும் பணி, மும்முரமாக நடக்கிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கட்டுமான பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடித்து, புது பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்; அதுவரையில், அருகே உள்ள எண்ணுார் பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.