/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேருந்தில் தவறி விழுந்து ஓட்டுனர் உடல்நசுங்கி பலி
/
பேருந்தில் தவறி விழுந்து ஓட்டுனர் உடல்நசுங்கி பலி
ADDED : ஜூன் 11, 2024 12:30 AM
குன்றத்துார்,செங்குன்றம் அடுத்த சோழவரம், இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன், 40. மறைமலை நகரில் உள்ள தனியார் தொழிற்சாலை பேருந்து ஓட்டுனர்.
அம்பத்துார், அய்யப்பாக்கத்தை சேர்ந்த ஊழியர்களை ஏற்றிக்கொண்டு மறைமலை நகரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு நேற்று காலை பேருந்தை ஓட்டிச்சென்றார். வண்டலுார்-- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்துார் அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் உள்ள தடுப்பின் மீது உரசி சென்றது. அப்போது, ஓட்டுனர் சீட்டில் இருந்த முருகன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
அதே பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில், முருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்தில் பயணித்த ஊழியர்கள் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

