/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரும்பு உருளை சரிந்த விபத்தில் ஓட்டுனர் பலி
/
இரும்பு உருளை சரிந்த விபத்தில் ஓட்டுனர் பலி
ADDED : ஆக 27, 2024 12:43 AM

மாதவரம்,
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 33; கன்டெய்னர் லாரி ஓட்டுனர். இவர், துறைமுகத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, நேற்று இரும்பு உருளைகள் ஏற்றி, லாரியை ஓட்டி வந்தார்.
அதிகாலை 2:00 மணியளவில், மாதவரம் அருகே மஞ்சம்பாக்கத்தில் லாரியை சாலையோரம் நிறுத்தி, லாரியிலேயே படுத்து பாலமுருகன் ஓய்வு எடுத்தார்.
இவரது லாரியின் முன்னே, இரும்பு தகடுகளை ஏற்றி வந்த கனரக லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த லாரியை அதன் ஓட்டுனரான வந்தவாசியைச் சேர்ந்த மகேந்திரன், 31, கிளம்புவதற்காக 'ரிவர்ஸ்' எடுத்துள்ளார். அப்போது, பாலமுருகனின் கன்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் மோதியது.
இதில் பாலமுருகனின் லாரியில், இரும்பு உருளை கட்டப்பட்டிருந்த செயின் அறுந்து, லாரியின் முன் பக்கத்தை உடைத்துக் கொண்டு உருண்டு கீழே விழுந்தது. இதில் லாரிக்குள் பாலமுருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாலமுருகனின் உடலை மீட்ட செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேந்திரனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.