/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரண்டு முறை பூமி பூஜை போட்ட தரைப்பாலத்திற்கு மீண்டும் அடிக்கல்
/
இரண்டு முறை பூமி பூஜை போட்ட தரைப்பாலத்திற்கு மீண்டும் அடிக்கல்
இரண்டு முறை பூமி பூஜை போட்ட தரைப்பாலத்திற்கு மீண்டும் அடிக்கல்
இரண்டு முறை பூமி பூஜை போட்ட தரைப்பாலத்திற்கு மீண்டும் அடிக்கல்
ADDED : ஆக 13, 2024 12:39 AM
சென்னை, சூளைமேட்டில் ஆபத்தான நிலையில் உள்ள இணைப்பு பாலத்திற்கு, இரண்டு முறை பூமி பூஜை போடப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் 1.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அண்ணா நகர் மண்டலம், 107வது வார்டில், அரும்பாக்கம் அருகில் சூளைமேடு, மாதா கோவில் தெருவில் உள்ளது. இந்த தெருவைச் சுற்றி, எம்.எச்., காலனி, கலெக்டர் காலனி உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன.
இங்குள்ள ரயில்வே காலனி மூன்றாவது தெரு, மாதா கோவில் தெரு மற்றும் அண்ணா நெடும்பாதையை இணைக்கும் பகுதியில், அரும்பாக்கம், அமைந்தகரை வழியாக வரும் விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாயில் பொதுமக்கள் கடப்பதற்காக, 4 அடி அகலத்தில் பழைய பாலம் உள்ளது. தரைப்பாலத்தை கடந்து, பெரியார் பாதை வழியாக சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர்.
பாலம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் தற்போது, சிதிலமடைந்துள்ளது. இருபுறங்களில் இருந்த பக்கவாட்டு தடுப்புச்சுவர் இடிந்துள்ளன. பலகட்ட போராட்டத்திற்கு பின், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 1.03 கோடி ரூபாயில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, பூமி பூஜையும் நடந்தது. ஆட்சி மாற்றத்தால் பணிகள் கைவிடப்பட்டன.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க 1.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டது. ஆனாலும் பணிகள் நடக்கவில்லை.
தற்போது, மூன்றாவது முறையாக நிதி ஒதுக்கீடு செய்து, தரைப்பாலம் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

