/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'காசா'வின் பிரெஞ்ச் டவுன் மேடவாக்கத்தில் அமைகிறது
/
'காசா'வின் பிரெஞ்ச் டவுன் மேடவாக்கத்தில் அமைகிறது
ADDED : மே 03, 2024 11:53 PM
சென்னை,சென்னை, மேடவாக்கம் அருகே 10.76 ஏக்கரில் பிரெஞ்ச் டவுன் புதிய குடியிருப்பு வளாகத்தை, காசா கிரவுண்ட நிறுவனம் அமைக்கிறது.
பிரெஞ்ச் கிராமங்களை நினைவூட்டும் வகையில், பிரமாண்டமான நுழைவாயில், அலங்கார விளக்குகள், கலை சிறப்புடன் மிக அழகான, பசுமை சூழலில் பிரெஞ்ச் டவுன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மேடவாக்கத்திலிருந்து 5 நிமிடம், வேளச்சேரியிலிருந்து 15 நிமிட துாரத்தில் இந்த பிரெஞ்ச் டவுன் அமைந்துள்ளது.
இதன் அருகில், விரைவில் வரவுள்ள மேடவாக்கம் மெட்ரோ நிலையம், எல்காட், பெரும்பாக்கம் ஐ.டி., நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள் அருகில் உள்ளன.
இது தொடர்பாக, காசா கிரவுண்ட் மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் விமேஷ் கூறுகையில், ''பிரெஞ்சு டவுனின் ஒவ்வொரு அம்சமும் ஆடம்பரம், அமைதியின் உணர்வை துாண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினருக்குமான பொழுதுபோக்கு வசதிகள் உட்பட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இத்திட்டத்தின் விளம்பரத் துாதராக நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளார்,'' என்றார்.