/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2.25 ஏக்கரில் மைதானம் ரூ.4 கோடியில் அமைகிறது
/
2.25 ஏக்கரில் மைதானம் ரூ.4 கோடியில் அமைகிறது
ADDED : செப் 16, 2024 02:47 AM

சென்னை:பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 23,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஆறு அரசு பள்ளிகள், ஒரு கல்லுாரி, ஐ.டி.ஐ., பேருந்து நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
ஒரு லட்சம் சதுர அடி பரப்பில், எட்டு இடங்களில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கல்லுாரி மற்றும் ஐ.டி.ஐ.,க்கு இடைப்பட்ட பகுதியில், ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க, 2.25 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. அதில், நான்கு கோடி ரூபாய் மதிப்பில், ஓட்டப்பந்தய பாதை, கபடி, கோ கோ, கூடைப்பந்து, கைபந்து, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதில், கபடி மற்றும் கூடைப்பந்துக்கு, தலா இரண்டு மைதானங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், ஒரே நேர்கோட்டில் ஆறு பேர் ஓடும் வகையில், 650 அடி நீளத்தில் ஓட்டப்பந்தய பாதை அமைகிறது. இதோடு, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை, உடை மாற்றும் அறைகள் மற்றும் 244 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய இருக்கைகள் அமைகின்றன.
அடுத்த மாதம் பணி துவங்கும் வகையில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

