/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீ விபத்தில் சிக்கிய மனைவி காப்பாற்றிய கணவர்
/
தீ விபத்தில் சிக்கிய மனைவி காப்பாற்றிய கணவர்
ADDED : ஆக 17, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மதுரவாயல், ருக்மணி தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 48. அவரது மனைவி ஸ்ரீபிரியா, 45.
அவர் நேற்று முன்தினம் இரவு, வரலட்சுமி நோன்பை முன்னிட்டு பூஜை அறையில் உள்ள சாமிக்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக விளக்கில் எறிந்த தீ ஸ்ரீபிரியாவின் புடவையில் பற்றிக் கொண்டது.
அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த கணவர் சாதுர்யமாக மீட்டு வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

