ADDED : ஜூன் 30, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, வியாசர்பாடி, சட்டம் - ஒழுங்கு காவல் நிலைய போலீஸ்காரராக பணிபுரிபவர் சரவணன், 35. நேற்று முன்தினம் நள்ளிரவு, இவரும், மற்றொரு போலீஸ்காரரான ஞானபிரசாத் என்பவரும் சாதாரண உடையில், கல்யாணபுரம் பிரதான சாலையில் மோட்டார் சைக்களில் ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பெருங்குடியை சேர்ந்த ஐ.டி., ஊழியரான அகிலேஷ், 25, அஜித்குமார், 27 ஆகியோரிடம் விசாரித்தனர். காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்ற போது, அகிலேஷ் அருகில் இருந்த கல்லை எடுத்து, போலீஸ்காரர் சரவணனின் தலையில் தாக்கிவிட்டு தப்பினர்.
பலத்த காயமடைந்த சரவணன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வியாசர்பாடி போலீசார் அகிலேஷை கைது செய்தனர். அஜித்குமாரை தேடி வருகின்றனர்.

