/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொடுக்கல், வாங்கல் பிரச்னை நண்பரை கொன்றவர் கைது
/
கொடுக்கல், வாங்கல் பிரச்னை நண்பரை கொன்றவர் கைது
ADDED : ஜூலை 09, 2024 12:25 AM

ஆவடி, ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன், 27. இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன், திருநங்கை கயல், 22, என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு வாரத்துக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இதனால், காஜா மொய்தீன், ஆவடி நந்தவன மேட்டூர், காந்தி தெருவைச் சேர்ந்த அவரது நண்பரும், ஆட்டோ ஓட்டுனருமான கார்த்திகேயன், 21, என்பவரது வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் காஜா மொய்தீன்,நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, 25,000 ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், காஜா மொய்தீன் மற்றும் கார்த்திகேயன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த கார்த்திகேயன், உடன் இருந்த நண்பர்களின் உதவியுடன், காஜா மொய்தீனை குத்தி கொலை செய்து தப்பினர்.
ஆவடி போலீசார் வழக்கு பதிந்து, காஜா மொய்தீனை கொலை செய்த, கார்த்திகேயன், 25, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 25, லலித், 21, லோகேஷ், 25, அஜித், 20, திருநின்றவூரைச் சேர்ந்த விக்னேஷ், 20, மற்றும் செங்குன்றத்தைச் சேர்ந்த சாந்தகுமார், 21, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆசிப் உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.