/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவர் கைது
/
வட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவர் கைது
ADDED : ஏப் 30, 2024 12:58 AM
அமைந்தகரை, சூளைமேடு, மேத்தா நகரைச் சேர்ந்தவர் பிரியா, 41. இவர், அமைந்தகரை பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். தொழில் ரீதியாக, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் வேலன், 44 என்பவரிடம், எட்டு காசு வட்டிக்கு, 3 லட்சம் ரூபாய் கந்து வட்டிக்கு, பிரியா கடன் வாங்கியுள்ளார்.
கடை இருந்த பகுதி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் என்பதால், கடந்த டிசம்பர் மாதம் கடை அகற்றப்பட்டது. இதனால், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், வட்டி கட்டாமல் இருந்துள்ளார். வேலன், சில தினங்களுக்கு முன், தன் வீட்டிற்கு வந்து வட்டி பணத்தை கேட்டு, தகாத வார்த்தையால் பேசி, மிரட்டியதாக, அமைந்தகரை போலீசில் பிரியா புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து, வேலனை, கந்து வட்டி மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
'கந்து வட்டிக்கு கடன் வாங்காமல், பல திட்டத்தின் கீழ் வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. அவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என, போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

