/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருடனை பிடிக்க முயன்றவர் ரயிலில் சிக்கி கால் துண்டிப்பு
/
திருடனை பிடிக்க முயன்றவர் ரயிலில் சிக்கி கால் துண்டிப்பு
திருடனை பிடிக்க முயன்றவர் ரயிலில் சிக்கி கால் துண்டிப்பு
திருடனை பிடிக்க முயன்றவர் ரயிலில் சிக்கி கால் துண்டிப்பு
ADDED : ஆக 18, 2024 12:31 AM

கொருக்குப்பேட்டை, ஒடிசா மாநிலம், கேன்ட்ராபரா, டோலமாராவை சேர்ந்தவர் கிரண் குமார் பிஸ்வால், 23. இவர் கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள பர்னிச்சர் கம்பெனிக்கு வேலைக்கு சேர்ந்தார்.
தன் நண்பர்கள் மூவருடன், சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளா நோக்கி செல்லும் ஷாலிமர் விரைவு ரயிலில் புறப்பட்டார்.
கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர் பிரிட்ஜ் அருகே ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது, ரயிலில் இருந்த மூன்று வாலிபர்கள், கிரண் குமார் பிஸ்வால் மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். அவர்களை பிடிக்க முயன்ற போது, ரயிலில் இருந்து கிரண் குமார் பிஸ்வால் தவறி கீழே விழுந்தார்.
இதில் அவர் ரயில் சக்கரங்களில் சிக்கியதில், அவரது வலதுகால் முட்டிக்கு கீழ் துண்டானது.
தகவலறிந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் கிரண்குமார் பிஸ்வாலை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு கிரண்குமார் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில் நிலைய போலீசார் வழக்கு, மொபைல்போன் பறித்த வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகரை சேர்ந்த சுந்தரேசன், 23, பழைய வண்ணாரப்பேட்டை, கீரை தோட்டம் பகுதியை சேர்ந்த யுவராஜ், 20 ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், சுந்தரேசன் மீது மூன்று வழக்குகளும், யுவராஜ் மீது ஆறுக்கு மேற்பட்ட வழக்குகளும் உள்ளது தெரிந்தது. இருவரையும் சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவான ஹரிபாபு என்பவரை தேடி வருகின்றனர்.

