/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிதாக அமைத்த தடுப்பு மீண்டும் உடைந்து சேதம்
/
புதிதாக அமைத்த தடுப்பு மீண்டும் உடைந்து சேதம்
ADDED : ஆக 27, 2024 12:17 AM

சென்னை, நெல்சல் மாணிக்கம் சாலையில், புதிதாக அமைக்கப்பட்ட, 'மீடியன்' தடுப்புகள் மீண்டும் சேதமடைந்து, விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளன.
அண்ணா நகர் மண்டலம், 107 வது வார்டு அமைந்தகரையில், நெல்சன் மாணிக்கம் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு, சூளைமேடு, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியும். இவ்வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் உள்ள சென்டர் மீடியன், படுமோசமாக இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்த ஜூலை மாதம் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் பின், சாலையில் குறிப்பிட்ட துாரத்திற்கு புதிதாக 'மீடியன்' அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட தடுப்புகள், தற்போது மீண்டும் சேதமடைந்து, சாலையில் நீட்டிக் கொண்டிருக்கின்றன.
இதனால், இரவு நேரங்களில் அவ்வழியாகச் செல்வோர் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து, சேதமடைந்துள்ள தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.