/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு அச்சகத்தில் போராட்டம் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்
/
அரசு அச்சகத்தில் போராட்டம் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்
அரசு அச்சகத்தில் போராட்டம் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்
அரசு அச்சகத்தில் போராட்டம் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்
ADDED : மார் 29, 2024 12:29 AM
சென்னை, சென்னை தங்கசாலையில் இயங்கி வரும் அரசு அச்சகத்தில்,600க்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். மூன்று 'ஷிப்ட்'களில் வேலை நடந்து வருகிறது.
இங்கு, பல்கலைக் கழகங்களுக்கான விடைத்தாள் மற்றும் லோக்சபா தேர்தலுக்கு தேவையான நோட்டீஸ், மின்னணு இயந்திரத்தில் ஒட்டக்கூடிய 'டம்மி' வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவை அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.
அடுத்த சில நாட்களில் சின்னம் மற்றும் வேட்பாளர் பட்டியல் அச்சடிக்கும் பணி நடக்க உள்ளது. இங்கிருந்து தான், 39 தொகுதிக்குமான நோட்டீஸ் உள்ளிட்டவை செல்லப்பட உள்ளன.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி உரிய நேரத்திற்கு பணிக்கு வராததால், தி.மு.க., தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு, தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இரண்டு மணி நேரம் பணி செய்யாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும், துணை பணி மேலாளருக்கு மிரட்டல் விடுத்தனர்.
அடுத்த சில மணி நேரத்தில் ஊழியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தற்போது, சம்பந்தப்பட்ட தொழிற்சங்க நிர்வாகி மீது, துணை பணி மேலாளர் சார்பில் உயரதிகாரிகளுக்கு புகார் தரப்பட்டுள்ளது.

