/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரிய பணியால் பொலிவிழந்த பூங்கா
/
குடிநீர் வாரிய பணியால் பொலிவிழந்த பூங்கா
ADDED : ஆக 21, 2024 12:27 AM

கோயம்பேடு, குடிநீர் வாரிய பணிகளால் கோயம்பேடு மேம்பால ரவுண்டானா பூங்கா பொலிவிழந்துள்ளது. குடிநீர் வாரியம் ஒப்படைத்ததும் சீர் செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோரம் உள்ள பூங்கா, மேம்பாலங்களின் கீழ் பகுதி உள்ளிட்டவை அழகுபடுத்தப்பட்டன. இதில், கோயம்பேடு மேம்பாலம் ரவுண்டானாவின் கீழ் உள்ள, 40 ஆயிரம் சதுர அடி நிலத்தில், பூங்கா மற்றும் செயற்கை நீருற்று அமைக்கப்பட்டது.
அந்த இடத்தில், சில மாதங்களுக்கு முன் குடிநீர் வாரியம் சார்பில் குழாய் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டன. இதில், பூங்கா முழுமையாக சீர்குலைந்துள்ளது. எனவே, பூங்காவை சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மேம்பாலம் கீழ் உள்ள பூங்கா குடிநீர் வாரிய பணிகள் முடிந்து, இன்னும் மாநகராட்சியிடம் ஒப்படைக்கவில்லை. குடிநீர் வாரியம் ஒப்படைத்ததும், பூங்கா சீர் செய்யப்படும்' என்றனர்.

