/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணின் புகைப்படம் ஆபாசமாக சித்தரித்தவர் கைது
/
பெண்ணின் புகைப்படம் ஆபாசமாக சித்தரித்தவர் கைது
ADDED : மே 25, 2024 01:57 AM
தாம்பரம், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமுல்ராஜிடம், பிப்., 27ம் தேதி பெண் ஒருவர் புகார் அளித்தார்.
அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நாகபட்டினம் மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் சுடரொளி, 35. இவர், சென்னையில் பணிபுரிந்த போது, அவருடன் அப்பெண்ணும் பணிபுரிந்துள்ளார். அப்போது, அப்பெண்ணும், சுடரொளிவும், அடிக்கடி 'வாட்ஸாப்' வீடியோ காலில் பேசி வந்துள்ளனர்.
பேசும்போது, சுடரொளி, அப்பெண்ணின் அனுமதியில்லாமல், அவரை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். இந்த நிலையில்,
அப்பெண்ணிடம் திருமணத்திற்கு சுடரொளி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுக்கவே, ஆத்திரத்தில், பிப்., 9ம் தேதி, 'இன்ஸ்டா' பக்கத்தில், சுடரொளி அப்பெண்ணின் படங்களை ஆபாசமாக சித்தரித்து, பதிவேற்றம் செய்துள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரித்த போலீசார், சுடரொளியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

