ADDED : ஏப் 28, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூக்கடை:சென்னை, பூக்கடை, முத்துசாமி மேம்பாலம், பல் மருத்துவக் கல்லுாரி விடுதி அருகே நடைபாதையில் நேற்று பல் மருத்துவக் கல்லுாரி மாணவி நடந்து சென்றார்.
அப்போது அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் தவறான சைகை காட்டியதோடு, மாணவியை இடித்து விட்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து விடுதி காவலாளி ராஜசேகர் கொடுத்த புகாரின்படி பூக்கடை போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது நிஷார் அன்சாரி, 42 என்பவரை, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

