/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணிபுரிந்த நிறுவனத்தில் கையாடல் செய்தவர் கைது
/
பணிபுரிந்த நிறுவனத்தில் கையாடல் செய்தவர் கைது
ADDED : ஜூலை 27, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரு.வி.க.நகர், திரு.வி.க.நகர், வரதராஜன் தெருவைச் சேர்ந்தவர் விமலா, 40. இவர் ஆந்திர மாநிலம் நெல்லுாரில் 'இசானி லாஜிஸ்டிக்' என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நிறுவன கணக்கு விபரங்களை சரிபார்த்தபோது, மேலாளர் அங்காடி ஸ்ரீகாந்த் என்பவர் போலியாக ரசீதுகள் தயாரித்து, 2017 முதல் 2022 வரை, 27.50 லட்ச ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்தது. இது குறித்து, திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் விமலா புகார் அளித்தார்.
இது குறித்து விசாரித்த போலீசார், கையாடலில் ஈடுபட்ட நெல்லுார் மாவட்டத்தைச் சேர்ந்த அங்காடி ஸ்ரீகாந்த், 38, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.