/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரால் பம்மலில் மறியல் போராட்டக்காரர்களை குண்டுகட்டாக துாக்கிய போலீசார்

ADDED : ஆக 31, 2024 12:10 AM
பம்மல், தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், பம்மல், 7வது வார்டு அண்ணா நகர், தயாளு தெருவில் 100க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
இந்த தெருக்களில், நேற்று காலை குளம் போல் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசியது. சிலரது வீட்டிற்குள்ளும் கழிவுநீர் புகுந்தது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், பம்மல், நல்லதம்பி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சங்கர் நகர் போலீசார், 1வது மண்டலக் குழு தலைவர் கருணாநிதி ஆகியோர் அங்கு சென்றனர்.
கருணாநிதி, போராட்டக்காரர்களை சமரசப்படுத்தாமல், அவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார், பெண்களையும், முதியவர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, வாகனத்தில் ஏற்றி, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பம்மல், தயாளு தெரு, பல்லாவரம் எல்லையில் உள்ளது. இத்தெரு, அகலம்குறைவான, பள்ளமான முட்டுச்சந்து. இதன் ஒரு பகுதியில், பல்லாவரம் பாதாள சாக்கடை செல்கிறது.
தயாளு தெருவில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மேற்கண்ட பாதாள சாக்கடை வழியாக ஓடி, அருகேயுள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் செல்லும்.
அங்கு, மோட்டார் பழுதானாலோ அல்லது பம்பிங் செய்யவில்லை என்றாலோ, மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி, தயாளு தெருவில் குளம்போல் தேங்குகிறது.
அடிக்கடி இப்பிரச்னை நடப்பதால், டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் பரவும் அச்சம் உள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெருக்களில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க, நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.