/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நான்கு வழி சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்
/
நான்கு வழி சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்
ADDED : மே 05, 2024 12:12 AM

குன்றத்துார், குன்றத்துார் நான்கு சாலை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்றத்துார் அரசு ஆண்கள் பள்ளி அருகே நான்கு சாலை சந்திப்பு உள்ளது. போரூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், செம்பரம்பாக்கம் ஏரி கரை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை இங்கு இணைகிறது.
போக்குவரத்து அதிகமுள்ள இப்பகுதியில், நாலாபுறங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், தாறுமாறாக வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு நிரந்தர தீர்வாக, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் மற்றும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட வேண்டும். ஆனால், போக்குவரத்து போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லை.
விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், குன்றத்துார் நான்கு வழி சந்திப்பில் சிக்னல் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.