/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவருக்கு கஞ்சா சாக்லெட் விற்பனையாளர் சிக்கினார்
/
மாணவருக்கு கஞ்சா சாக்லெட் விற்பனையாளர் சிக்கினார்
ADDED : ஆக 20, 2024 12:24 AM
சென்னை, சென்னை, எல்.ஐ.சி., மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு, பயணியரின் பைகளை 'ஸ்கேனிங்' செய்த போது, வாலிபர் ஒருவரின் பையில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்துள்ளது.
பையை திறந்து சோதனை செய்ததில், 19 கஞ்சா சாக்லெட்கள் இருந்துள்ளன.
பின் அவரை, அண்ணாசாலை போலீசில் ஒப்படைத்துள்ளனர். வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர் என்பதும், 21 வயதான அவர், பிரபல தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.
அவர் அளித்த தகவலின்படி, கஞ்சா சாக்லெட் விற்பனையாளரான, உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ், 22, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

