/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கிரெடிட் லிமிட்' ஆசை ரூ.24,700 இழந்த வாலிபர்
/
'கிரெடிட் லிமிட்' ஆசை ரூ.24,700 இழந்த வாலிபர்
ADDED : ஆக 25, 2024 12:15 AM
தண்டையார்பேட்டை,
வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையைச் சேர்ந்தவர் கிஷோர் குமார், 24; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, இரு தினங்களுக்கு முன், மொபைல் போனிற்கு அழைப்பு ஒன்று வந்தது.
அதில், உங்களுடைய கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க, எச்.டி.எப்.சி., வங்கியின் விபரங்களை கூற வேண்டும் என பேசியுள்ளார்.
அதை நம்பிய கிஷோர், வங்கி விபரங்களை கூறியுள்ளார். பின், மொபைல் போன் எண்ணிற்கு வந்த, ஓ.டி.பி.,யை பகிர்ந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, 24,700 ரூபாய், கிஷோரின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்தவர், வங்கியில் சென்று விசாரித்துள்ளார்.
அதற்கு வங்கி, தங்களுக்கும், இந்த பரிவர்த்தனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறினர். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிஷோர், தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் நேற்று புகார் அளித்தார்.
இது குறித்து, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசார், மோசடி குறித்து விசாரிக்கின்றனர்.

