/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
/
காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
ADDED : செப் 08, 2024 12:25 AM
காசிமேடு,
காசிமேடு, இந்திரா நகர் குடிசை பகுதியில், கடந்த 1ம் தேதி நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 14 குடிசைகள் எரிந்து நாசமாயின.
இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக்கூறி, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் காசிமேடு பகுதியைச் சேர்ந்த சுபா, சதீஷ், சத்யா, சுதா, ஆகிய நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இவர்கள் மீது கஞ்சா விற்பனை செய்வதும், காவல் நிலையத்தில் வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் இருந்த சத்யா, பொய் வழக்கு போடுவதாக கூறி, திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
சுதாரித்த போலீசார், தண்ணீர் ஊற்றி சத்யாவை காப்பாற்றினர்.