ADDED : மார் 25, 2024 12:53 AM
கும்மிடிப்பூண்டி:செங்குன்றம் அடுத்த விஜயநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், 32. இவரது மனைவி மேனகா.
கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே துராபள்ளம் கிராமத்திலுள்ள தாய் வீட்டில், மேனகா வசித்து வந்துள்ளார்.
நேற்று, மனைவியை பார்க்க துராபள்ளம் சென்ற நந்தகுமார், குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். கத்தியால் மனைவியை வெட்ட முயன்ற போது, மேனகாவின் அக்கா அம்பிகா தடுக்க முற்பட்டார்.
அப்போது, அம்பிகாவின் கையில் கத்தி கிழித்து காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த மற்றொரு அக்கா ஷோபனா, 38, என்பவர் கத்தியை பிடுங்கி, நந்தகுமாரின் தலையில் சரமாரியாக வெட்டினார்.
படுகாயமடைந்த நந்தகுமார், ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், ஷோபனாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

