/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
/
தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ADDED : ஜூன் 29, 2024 12:12 AM
ஓட்டேரி, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் செல்வி, 45. கணவர் ஆறுமுகத்தை பிரிந்த இவர், மூன்று பிள்ளைகளுடன் புளியந்தோப்பைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சுப்பிரமணி, 60, என்பவருடன், 20 ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளார்.
சில நாட்களாக சுப்பிரமணியிடம் பேசுவதை தவிர்த்த செல்வி, இரு நாட்களுக்கு முன், பட்டாளம் ராமானுஜ தோட்டத்திலுள்ள மகள் நாகவல்லி வீட்டிற்கு சென்றார்.
அங்கு வந்த சுப்பிரமணி, செல்வியை சமாதானப்படுத்தி தன்னுடன் அழைத்து செல்ல முயன்றார். அவர் மறுக்கவே, எடுத்து சென்ற பெட்ரோலை செல்வி மீது ஊற்றி தீ வைத்தார்.
செல்வி 90 சதவீதம் தீக்காயங்களுடன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இறந்தார்.
செல்வியை தீயிட்டு கொளுத்தும்போது சுப்ரமணி, சம்பவத்தை தடுக்க முயன்ற நாகவல்லி கணவர் தினேஷ் ஆகியோரும் 40 சதவீதம் காயமடைந்தனர்.
இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுப்பிரமணி மீது கொலை வழக்கு பதிந்து, ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

