/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதலாளியின் பணம் 10 லட்சம் ரூபாயுடன் வாலிபர் தலைமறைவு
/
முதலாளியின் பணம் 10 லட்சம் ரூபாயுடன் வாலிபர் தலைமறைவு
முதலாளியின் பணம் 10 லட்சம் ரூபாயுடன் வாலிபர் தலைமறைவு
முதலாளியின் பணம் 10 லட்சம் ரூபாயுடன் வாலிபர் தலைமறைவு
ADDED : ஆக 19, 2024 01:33 AM
வடபழனி:மேடவாக்கம் நபர் கடனாக பெற்ற 10 லட்சம் ரூபாயுடன் தலைமறைவான ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேடவாக்கம், சந்தோஷ்புரத்தைச் சேர்ந்தவர் பாசில் அகமது, 48. இவர், 'டெக்னோ கிரிட்' எனும் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தேவைக்காக நண்பரான அபிேஷக் என்பவரிடம், 10 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.
வடபழனி கிரீன் பார்க் ேஹாட்டலில் இருக்கிறேன்; அங்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அபிேஷக் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நேற்று முன்தினம் மதியம் பாசில் அகமது, தன் நிறுவனத்தில் பணிபுரியும் விஜய் என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ேஹாட்டலுக்கு சென்றார்.
ேஹாட்டலின் மூன்றாவது தளத்தில் உள்ள லாபியில் இருந்து அபிேஷக்கிடம் 10 லட்சம் ரூபாய் பெற்றார்.
அபிேஷக் பணத்திற்கு நான்கு காசோலைகள் கேட்டதால், பணத்தை விஜயிடம் கொடுத்து விட்டு காசோலை எடுக்க பாசில் அகமது கீழே சென்றுள்ளார்.
திரும்பி வந்த பார்த்தபோது, பணத்துடன் விஜய் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.

