/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விருகையில் ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் இல்லை
/
விருகையில் ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் இல்லை
ADDED : மே 07, 2024 12:25 AM
விருகம்பாக்கம், கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம் பாரதிதாசன் நகர் மற்றும் முதலாவது தெருவில், 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 10 நாட்களாக, இந்த குடியிருப்பிற்கு குழாய் வாயிலாக வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த பயனுமில்லை.
இதனால், அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். அவர்களும் முறையான பதில் கூறவில்லை. வீராணம் ஏரி தண்ணீர் வராததால் குடிநீர் தட்டுபாடு உள்ளது' என்கின்றனர்.