/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதிசேஷ தீர்த்த குளத்திற்கு மழைநீர் வருவதில் மீண்டும் சிக்கல்
/
ஆதிசேஷ தீர்த்த குளத்திற்கு மழைநீர் வருவதில் மீண்டும் சிக்கல்
ஆதிசேஷ தீர்த்த குளத்திற்கு மழைநீர் வருவதில் மீண்டும் சிக்கல்
ஆதிசேஷ தீர்த்த குளத்திற்கு மழைநீர் வருவதில் மீண்டும் சிக்கல்
ADDED : ஜூலை 16, 2024 12:35 AM
திருவொற்றியூர், சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வர்.
விழாக்காலங்களில் கூட்டம் கட்டுக்கடங்காது. சென்னை மட்டுமின்றி, பிற மாவட்டம், மாநிலம் மற்றும் நாடுகளில் இருந்தும், பக்தர்களின் வருகை இருக்கும்.
உலக பிரசித்தி பெற்ற, தியாகராஜ சுவாமி கோவிலின் வெளியே, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆதிசேஷ தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்திற்கான நீர் வழிப்பாதை சரிவர பராமரிக்கப்படாததால், மழைநீர் குளத்திற்குள் வருவதில் சிக்கல் இருந்து வந்தது.
பின், மண்டல குழு தலைவர் தனியரசு, மழைநீர் வடிகால்களை புனரமைத்து, குளத்திற்கு மழைநீர் வர ஏற்பாடு செய்தார்.
இருப்பினும், தேங்கிய மழைநீர் மளமளவென வற்றி, குளம் காய்ந்து போனது. தற்போது, தொடர் மழை பெய்து வரும் நிலையில், குளத்திற்கு மழைநீர் வருவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து, மழைநீர் வடிகால்களை உடனடியாக துார் வார வேண்டும். கோவில் நிர்வாகம் கவனித்து, குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்க ஏதுவாக, களிமண் லேயர் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

