/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடை இருக்கு; நிழல் இல்லை பேருந்து பயணியர் தவிப்பு
/
குடை இருக்கு; நிழல் இல்லை பேருந்து பயணியர் தவிப்பு
குடை இருக்கு; நிழல் இல்லை பேருந்து பயணியர் தவிப்பு
குடை இருக்கு; நிழல் இல்லை பேருந்து பயணியர் தவிப்பு
ADDED : ஆக 29, 2024 12:25 AM

திருவொற்றியூர், சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தம், திருவொற்றியூர் நெடுஞ்சாலையையும், கிழக்கே எண்ணுார் விரைவு சாலையை இணைக்கும் பிரதான சாலை சந்திப்பாக உள்ளது.
திருவொற்றியூரில் இருந்து, வள்ளலார் நகர், பிராட்வே, எழும்பூர், திருவான்மியூர், கோவளம், தாம்பரம் என, சென்னையின் பிற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும்.
இந்நிலையில், சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தில், பயணியர் காத்திருக்க அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையின் மேற்கூரை பெயர்ந்து வெட்டவெளியாக காட்சியளிக்கிறது.
வெயில் நேரத்திலும், இந்த குடையை பயன்படுத்த முடிவதில்லை. மழை நேரத்தில் நிலைமை படுமோசமாக உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மேற்கூரை பெயர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கும் சுங்கச்சாவடி பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.
- ஆர்.கண்ணன், திருவொற்றியூர்.

