/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் பொய் என்பதே கிடையாது: தமிழச்சி
/
தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் பொய் என்பதே கிடையாது: தமிழச்சி
தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் பொய் என்பதே கிடையாது: தமிழச்சி
தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் பொய் என்பதே கிடையாது: தமிழச்சி
ADDED : ஏப் 18, 2024 12:26 AM

சென்னை, சோழிங்கநல்லுார், நீலாங்கரை பகுதிகளில், தி.மு.க.,வின் தென்சென்னை வேட்பாளர் சுமதி என்ற தமிழச்சி, இறுதிக்கட்ட பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டார். அப்போது, அவர் கூறியதாவது:
தென்சென்னையில் 24வது நாளாக பிரசாரம் செய்கிறேன். முதல் நாள் போல், வரவேற்பு குறையாத அளவில், இறுதிக்கட்ட பிரசாரமும் உள்ளது.
தமிழக முதல்வர் 1.16 கோடி பேருக்கு, 1,000 ரூபாய் உதவித்தொகை அளித்து வருகிறார். இத்திட்டத்தில், இன்னும் 2 கோடி மக்கள் பயனடைய உள்ளனர்.
மக்களுக்கு தேவையான மழைநீர் வடிகால்வாய் திட்டம், கழிவுநீர் வாய்க்கால் திட்டம், இ.சி.ஆர்., சாலையை விரிவுபடுத்துவது, சைதாப்பேட்டை மேம்பாலம் என, அத்தியாவசிய தேவைகளுக்கான திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
தி.மு.க., அறிவிக்க முடியாத திட்டங்களை, யாருக்கும் அறிவிப்பதில்லை. பக்கம், பக்கமாக பயனில்லாத அறிக்கைகளை நாம் எப்போதும் கூறுவதில்லை. நடைமுறையில் உள்ளதை மட்டும் தி.மு.க., சொல்லும்; அவற்றை நடைமுறைப்படுத்தும்.
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இதுவரை வரவில்லை. அவ்வாறு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் இருந்தால், அவற்றை சமாளிக்கும் திட்டங்கள், நம்மிடம் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

