/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் ஊற்றெடுத்த தண்ணீரால் சலசலப்பு
/
சாலையில் ஊற்றெடுத்த தண்ணீரால் சலசலப்பு
ADDED : ஜூலை 28, 2024 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதவரம்:மாதவரம் பஜார் அருகே பிரதான சாலையில், நேற்று திடீரென விரிசல் ஏற்பட்டு, அவ்வழியே தண்ணீர்ஊற்றெடுத்து வெளியேறியது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் தடுமாற்றத்துடன் அப்பகுதியை கடந்து சென்று வந்தனர்.
இது குறித்து குடிநீர்வாரிய அதிகாரிகள்கூறுகையில், 'சென்னை புறநகரில் பரவலாக பெய்த மழையால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. அவை சாலையில் ஏற்பட்ட விரிசல் வழியே வெளியேறி இருக்கலாம்.
மேலும், மெட்ரோ வேலை நடக்கும் இடத்தில்குழாய் லைனில் பழுது ஏற்பட்டிருந்தால் கூட, இதுபோல் தண்ணீர்வெளியேறக் கூடும். ஆய்வு செய்து நடவடிக்கைஎடுக்கப்படும்.