/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகாரத்தில் தலைதுாக்கும் குன்றத்துார் மண்ணின் மைந்தர்கள்
/
அதிகாரத்தில் தலைதுாக்கும் குன்றத்துார் மண்ணின் மைந்தர்கள்
அதிகாரத்தில் தலைதுாக்கும் குன்றத்துார் மண்ணின் மைந்தர்கள்
அதிகாரத்தில் தலைதுாக்கும் குன்றத்துார் மண்ணின் மைந்தர்கள்
ADDED : ஏப் 16, 2024 12:07 AM
குன்றத்துார்காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்துாரைச் சேர்ந்த அன்பரசன், தி.மு.க., காஞ்சிபுரம் மாவட்ட செயலராகவும், சிறு, குறு தொழில் துறை அமைச்சராகவும் உள்ளார்.
குன்றத்துார் அருகே, மணிமங்கலத்தைச் சேர்ந்த செல்வபெருந்தகை தமிழக காங்., தலைவராகவும், ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளார். படப்பையைச் சேர்ந்த மனோகரன், காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவராக இருக்கிறார்.
இதற்கு முன், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களாக பலர், குன்றத்துாரைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
மதனந்தபுரம் அ.தி.மு.க.,வின் பழனி, 2016ல் ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., குன்றத்துார் கோதண்டலம்-, 1989, 1996ல் தி.மு.க., சார்பில் ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றனர். திருமுடிவாக்கம் கிருஷ்ணன், -அ.தி.மு.க., சார்பில் ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ.,வாக 1977ல் வென்றார்.
சிறுவஞ்சூர் வேணுகோபால்- 1998ல் ஸ்ரீபெரும்புதுார் அ.தி.மு.க., எம்.பி.,யாகவும், திருமுடிவாக்கம் லட்சுமணன் 1971ல் ஸ்ரீபெரும்புதுார் -தி.மு.க., எம்.பி.,யாகவும் வென்றனர்.
தமிழக அரசியல் களத்தில், சென்னை புறநகரில் குன்றத்துார் தாலுகாவைச் சேர்ந்த மேற்கண்டோர், அரசியலில் தனி அடையாளம் பதித்தவர்களாக உள்ளனர்.

