/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீராதாரமாகும் திருநின்றவூர் ஏரி ரூ.100 கோடி மதிப்பீடில் திட்டம்
/
நீராதாரமாகும் திருநின்றவூர் ஏரி ரூ.100 கோடி மதிப்பீடில் திட்டம்
நீராதாரமாகும் திருநின்றவூர் ஏரி ரூ.100 கோடி மதிப்பீடில் திட்டம்
நீராதாரமாகும் திருநின்றவூர் ஏரி ரூ.100 கோடி மதிப்பீடில் திட்டம்
ADDED : மே 06, 2024 12:57 AM
சென்னை:சென்னைக்கு குடிநீர் வழங்கும் வகையில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருநின்றவூர் ஏரியை புனரமைக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை நகரின் ஒரு மாத குடிநீர் தேவை 1 டி.எம்.சி., ஆகும். விரிவாக்கப்பகுதிகள் வளர்ந்து வரும் நிலையில், குடிநீர் தேவை 2 டி.எம்.சி.,யாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதை கருத்தில் வைத்து, கூடுதல் குடிநீர் ஆதாரங்களை உருவாக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் ஏரியை, சென்னையின் குடிநீராதாரம் ஆக்குவதற்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிதியில், திருநின்றவூர் ஏரியை புனரமைப்பதற்கான முன்னேற்பாடுகளை, சென்னை மண்டல நீர்வளத்துறை துவங்கி உள்ளது.
இது குறித்து, சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருநின்றவூர் ஏரி, 0.15 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. இதை, 0.50 டி.எம்.சி.,யாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, சென்னையின் 15 நாட்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.
இந்த ஏரி மொத்தம், 862 ஏக்கர் பரப்பு கொண்டது. கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்பு காரணங்களால், ஏரியின் பரப்பளவு குறைந்துள்ளது. இந்த ஏரியை குடிநீர் ஆதாரமாக மாற்றுவதால், சென்னை மட்டுமின்றி ஆவடி மாநகராட்சியும் பயன்பெறும். ஏரியில் இருந்து சவுடு மணலை அகற்றி, விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஏரியில் மழைகாலங்களில் உபரிநீரை வெளியேற்றும் வகையில் ஷட்டர்கள், கால்வாய்களும் அமைக்கப்பட உள்ளன. ஏரி புனரமைப்பு பணிகள் முடிந்தால், வெள்ளத்தால் பாதிக்கப்படும் சுற்றுப்பகுதிகளில் அபாயம் குறையும். நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.