/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்ரீபெரும்புதுாரில் களம் இறங்கிய திருவள்ளூர் அ.தி.மு.க.,வினர் தே.மு.தி.க.,விற்கு சீட்டு ஒதுக்கியதால் அதிருப்தி
/
ஸ்ரீபெரும்புதுாரில் களம் இறங்கிய திருவள்ளூர் அ.தி.மு.க.,வினர் தே.மு.தி.க.,விற்கு சீட்டு ஒதுக்கியதால் அதிருப்தி
ஸ்ரீபெரும்புதுாரில் களம் இறங்கிய திருவள்ளூர் அ.தி.மு.க.,வினர் தே.மு.தி.க.,விற்கு சீட்டு ஒதுக்கியதால் அதிருப்தி
ஸ்ரீபெரும்புதுாரில் களம் இறங்கிய திருவள்ளூர் அ.தி.மு.க.,வினர் தே.மு.தி.க.,விற்கு சீட்டு ஒதுக்கியதால் அதிருப்தி
ADDED : மார் 24, 2024 12:55 AM

பூந்தமல்லி, திருவள்ளூர் தனி தொகுதி அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்படும் என, அக்கட்சியினர் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக நல்லதம்பி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால், அதிருப்தியடைந்த திருவள்ளூர் தொகுதி அ.தி.மு.க.,வினர், பக்கத்து தொகுதியான ஸ்ரீபெரும்புதுார் அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமாருக்கு உதவியாக, தேர்தல் பணியில் களம் இறங்கியுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுாரில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் பிரேம்குமார், திருவள்ளூர் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலரும், பூந்தமல்லி நகராட்சி தலைவராக மூன்று முறை பொறுப்பு வகித்த பூவை.ஞானத்தின் மகன் என்பதும் முக்கிய காரணம். .
திருவள்ளூர் தொகுதி அ.தி.மு.க.,வினர், பூவை.ஞானத்திடம் நெருக்கமாக உள்ளவர்கள்.
இதனால், அவரது மகனை எப்படியும் ஜெயிக்க வைக்க வேண்டும் என, தேர்தல் வேலைகளில் அவர்கள் இறங்கியுள்ளனர். அரசியலுக்கு புதுமுகமான அவரை, குன்றத்துார், பல்லாவரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி பதவியில் இருக்கும் வட்ட செயலர், பகுதி செயலர் உள்ளிட்டோரிடம் அறிமுகப்படுத்தி, ஆதரவு கோரி வருகின்றனர்.
தற்போதைய எம்.பி.,யாக இருக்கும் டி.ஆர்.பாலு மீது, இத்தொகுதியில் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதை குறிப்பிட்டு ஓட்டு வேட்டை நடத்தினால், புதுமுகமாக இருந்தாலும் வெற்றி பெறலாம் என, அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதற்கேற்ப பிரேம்குமாருக்கு பயிற்சி அளித்து, கட்சி, பொதுக்கூட்டங்களில் தி.மு.க.,வின் அரைகுறை திட்டங்களை குறிப்பிட்டு பேச வைக்கின்றனர்.
திருவள்ளூர் தனி தொகுதியில் களம் இறங்கிய தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பி, தன் வெற்றிக்கு அ.தி.மு.க.,வினர் கைகொடுப்பர் என நினைத்திருந்த நிலையில், அத்தொகுதி அ.தி.மு.க.,வினர் ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு குடிபெயர்ந்திருப்பதை அறிந்து நொந்து போயுள்ளார்.
டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் 10 ஆண்டுகளாக எம்.பி.,யாக இருந்தவர். ஒருமுறை கூட, தொகுதி மக்களை சந்திக்க வந்ததில்லை. நான் இந்த மண்ணின் மைந்தன், எப்போது வந்தாலும் என்னை பார்க்கலாம். அவர், மது ஆலைகளை நடத்தி, மக்களுக்கு மது கொடுத்து கொன்று வருகிறார். ஆனால், நான் மருத்துவராக மருந்து கொடுத்து, அவர்களை காப்பாற்றி வருகிறேன்.
பிரேம்குமார்
அ.தி.மு.க., வேட்பாளர், ஸ்ரீபெரும்புதுார்.

