ADDED : செப் 10, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி,
வியாசர்பாடி, கல்யாணபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 18; தனியார் நிறுவன ஊழியர்.
இவர், கடந்த 5ம் தேதி, இ.எச்.ரோடு, உக்கரபாளையம் அருகே நடந்து சென்ற போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், பிரியதர்ஷினி கையில் இருந்த மொபைல்போனை பறித்து தப்பினர்.
இது குறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர். இதில், வியாசர்பாடி, பள்ள தெருவைச் சேர்ந்த முத்து, 21, வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட இருவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர்.