sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆயிரம்விளக்கு பஸ் நிறுத்தம் மெட்ரோவுக்காக இடமாற்றம்

/

ஆயிரம்விளக்கு பஸ் நிறுத்தம் மெட்ரோவுக்காக இடமாற்றம்

ஆயிரம்விளக்கு பஸ் நிறுத்தம் மெட்ரோவுக்காக இடமாற்றம்

ஆயிரம்விளக்கு பஸ் நிறுத்தம் மெட்ரோவுக்காக இடமாற்றம்


ADDED : ஜூலை 21, 2024 01:39 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணியில், மூன்று வழித்தடங்களில் மாதவரம் - சிறுசேரி வழித்தடமும் ஒன்று. இந்த தடத்தில், ஆயிரம்விளக்கு பகுதியில் மெட்ரோ நிலையம் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி கூறியதாவது:

ஆயிரம்விளக்கு பேருந்து நிறுத்தம், ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை - அண்ணாசாலை சந்திப்பில் உள்ளது. இங்கு, மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், தற்காலிகமாக ஆயிரம்விளக்கு பேருந்து நிறுத்தம் திரு.வி.க., சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

பாரிமுனையில் இருந்து - சைதாப்பேட்டை, கிண்டி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், திரு.வி.க., சாலை வழியாக சென்று பீட்டர்ஸ் சாலையில் வலது புறம் திரும்பி, பின் அண்ணாசாலை வழியாக செல்லும்படி மாற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us