/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேற்கு வங்க வாலிபர் பலி தாக்கிய மூன்று பேர் கைது
/
மேற்கு வங்க வாலிபர் பலி தாக்கிய மூன்று பேர் கைது
ADDED : ஜூன் 13, 2024 12:24 AM
சதுரங்கப்பட்டினம், : மேற்கு வங்க மாநிலம், உள்ளங்கி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி லாயேக், 23.
கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதியில், அணுசக்தி துறை பணி, தனியார் ஒப்பந்த நிறுவன தொழிலாளராக பணி செய்ய, கடந்த 6ம் தேதி வந்துள்ளார்.
அன்று இரவு, வழி தவறி நத்தமேடு பகுதி சென்றபோது, அங்குள்ளவரின் வீட்டு சுவரை எட்டி பார்த்ததாக தெரிகிறது.
அப்பகுதியினர் சந்தேகமடைந்து, அவரை தாக்கியுள்ளனர். தலை, உயிர்நாடியில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு உயிரிழந்தார்.
இது தொடர்பாக, நத்தமேடைச் சேர்ந்த வீரா, 23, கோபிநாதன், 25, ஜெகநாதன், 25, ஆகியோரை, சதுரங்கப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.