ADDED : ஆக 17, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, வியாசர்பாடி மல்லிப்பூ காலனியைச் சேர்ந்த சத்யதாஸ், 31, சியாமளா தம்பதி, தங்களுக்கு மூன்றாவதாக பிறந்த எட்டு மாத ஆண் குழந்தையை, அதே பகுதி கணேசன்-சரண்யா தம்பதிக்கு, கடந்த 10ம் தேதி, 2 லட்சம் ரூபாய்க்கு விற்றனர்.
குழந்தை பிரிவு தாங்க முடியாத சியாமளா, தன் தாய் உதவியுடன் வியாசர்பாடி போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
இதையடுத்து, சத்யதாசை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான எண்ணுாரை சேர்ந்த கணேஷ், 39, சரண்யா, 36, மூலக்கொத்தளம் பவானி, 34, ஆகியோரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
குழந்தையுடன் வேலுாருக்கு தப்பிய குமுதா என்பவரை, தேடி வருகின்றனர்.

