ADDED : ஜூலை 24, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு, நெற்குன்றம் கேட்டுக்குப்பம், தனலட்சுமி நகர் முதல் பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த, விருகம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த ராஜன், 18, ஆழ்வார்திருநகர் பெரியார் நகரை சேர்ந்த மணிகண்டன், 21 மற்றும் ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை மடக்கி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை சோதனை செய்த போது, அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த கோயம்பேடு போலீசார், 99 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.