/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடியை சரமாரியாக தாக்கி வீடியோ எடுத்த மூவர் கைது
/
ரவுடியை சரமாரியாக தாக்கி வீடியோ எடுத்த மூவர் கைது
ADDED : ஆக 07, 2024 12:41 AM
ஓட்டேரி, புளியந்தோப்பு, ருத்ரப்பா தெருவைச் சேர்ந்தவர் விக்கி, 28. இவரது நண்பர் பிரபு கஞ்சா விற்பதாக, சதீஷ் என்பவர் போலீசுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பிரபுவின் நண்பர் விக்கிக்கும், சதீஷுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுபோதையில் ஓட்டேரி பகுதியில் நேற்று நின்ற விக்கியை, சதீஷ் உட்பட மூவர் ஆட்டோவில் கடத்தி, அயனாவரம், வசந்த் கார்டன் தெருவில் வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். அதை, மொபைல் போனில் வீடியோ எடுத்து, மூலக்கடையில் இறக்கி தப்பி சென்றனர். இதுகுறித்து விசாரித்த தலைமை செயலக காலனி போலீசார், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஓட்டேரியைச் சேர்ந்த சதீஷ், 30, நரேன், 27, நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த சரவணன், 26, ஆகியோரை கைது செய்தனர்.