/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிக்குள் கைவரிசை காட்டிய மூவர் கைது
/
பள்ளிக்குள் கைவரிசை காட்டிய மூவர் கைது
ADDED : மே 29, 2024 12:26 AM
புளியந்தோப்பு,
புளியந்தோப்பு நெடுஞ்சாலையில், அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், நேற்று முன்தினம் இரவு சிலர் உள்ளே புகுந்து, பள்ளியில் இருந்த பேட்டரி உள்ளிட்ட, 30,000 ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் அண்ணாதுரை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர்.
தொடர் விசாரணையில், புளியந்தோப்பு, மோதிலால் தெருவைச் சேர்ந்த வினோத்குமார் என்கிற ஏழுமலை, 19, 'நரி' நரேந்திரன், 23, 'கார்கோ' சஞ்சய், 18, ஆகிய மூவரும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், திருடிய பொருட்களை ஓட்டேரியில் உள்ள பழைய இரும்பு கடையில் விற்று, மது அருந்தியதும் தெரியவந்தது.