/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துணிக்கடைகளில் மாமூல் சிறுவன் உட்பட மூவர் கைது
/
துணிக்கடைகளில் மாமூல் சிறுவன் உட்பட மூவர் கைது
ADDED : செப் 17, 2024 12:38 AM

வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, என்.என்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கிேஷார்குமார், 26. இவர், அதே பகுதியில் 'டிரென்டிங் பாய்ஸ்' என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 14ம் தேதி நள்ளிரவு, கடைக்கு வந்த மூவர் கும்பல், சட்டை வாங்கிய நிலையில், அதற்கான பணம் 1,500 ரூபாய் தரமறுத்துள்ளனர்.
அப்போது மர்ம கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, 'கடையில் பெட்ரோல் குண்டு வீசி விடுவோம்' என மிரட்டல் விடுத்ததுடன், கிேஷார்குமாரை தாக்கி தப்பினர்.
பின், அதே பகுதியில் கே.ஜி.எப்., பெயரில் செயல்படும் துணிக்கடையில், 2,500 ரூபாய் மதிப்பிலான துணிகளை எடுத்து கொண்டு, கடை உரிமையாளர் ஆகாஷுக்கு மிரட்டல் விடுத்து தப்பினர்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து, கொடுங்கையூரசை் சேர்ந்த லிங்கேஸ்வரன், 19; அம்பத்துார் திருமலை, 20, மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்தனர்.
இருவரை சிறையில் அடைத்த போலீசார், சிறுவனை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.