/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இருவேறு பகுதியில் கஞ்சா விற்ற மூவர் சிக்கினர்
/
இருவேறு பகுதியில் கஞ்சா விற்ற மூவர் சிக்கினர்
ADDED : ஆக 27, 2024 12:16 AM
பூந்தமல்லி,பூந்தமல்லி அருகே குமணன்சாவடி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, பூந்தமல்லி போலீசார் அங்கு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு, சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து சோதனை செய்த போது, அவரிடம் 1.2 கிலோ கஞ்சா மற்றும் 140 போதை மாத்திரைகள் இருந்தன.
விசாரணையில் அவர், புளியந்தோப்பைச் சேர்ந்த ஜெயசிம்மா, 22, என தெரியவந்தது. இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதே போல, அமைந்தகரை பி.பி., கார்டன் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக, அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் மாலை, பி.பி., கார்டன் கூவம் கரையோரத்தில் அமர்ந்திருந்த இருவரை பிடித்து போலீசார் சோதித்த போது, அவர்களிடம் 100 கிராம் கஞ்சா சிக்கியது.
விசாரணையில், வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த பானை அஜித், 24, அமைந்தகரை எம்.எம்.காலனியைச் சேர்ந்த கிஷோர் குமார், 22, என தெரிந்தது. அவர்களை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.