/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலியல் தொழில் மூவர் கைது 7 பெண்கள் மீட்பு
/
பாலியல் தொழில் மூவர் கைது 7 பெண்கள் மீட்பு
ADDED : மார் 06, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர்: அண்ணா நகர், மூன்றாவது அவென்யூவில் செயல்படும் தனியார் ஸ்பாவில், பாலியல் தொழில் நடப்பதாக, அண்ணா நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர், ஸ்பாவில் சோதனை செய்ததில், பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.
இதையடுத்து, பாலியல் தொழில் நடத்திய, கேரளாவைச் சேர்ந்த சுஜின், 34, அகில், 24, ஆனந்து, 27, ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர்.
மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஏழு வடமாநில பெண்களை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.