/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவாபுரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
சிறுவாபுரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஆக 22, 2024 12:11 AM
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் சென்னை, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில், ஆண்டுதோறும் வள்ள-மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும். இந்தாண்டு, 12வது திருக்கல்யாண உற்சவம் செப்.,1ல் நடக்கிறது.
அன்று காலை 6:00 மணி முதல் விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் அபிஷேகம் நடக்கிறது.
காலை, 7:00 மணிக்கு மூவலருக்கு அபிஷேக, அலங்காரம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு வள்ளி மணவாளருக்கு அபிஷேகமும், காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
நண்பகல் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணமாகாதவர்கள், திருக்கல்யாண சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்கலாம்.