/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்துகளை தடுக்க சுரங்கப்பாதை மதுராந்தகத்தில் ரூ.22 கோடியில் அமைகிறது
/
விபத்துகளை தடுக்க சுரங்கப்பாதை மதுராந்தகத்தில் ரூ.22 கோடியில் அமைகிறது
விபத்துகளை தடுக்க சுரங்கப்பாதை மதுராந்தகத்தில் ரூ.22 கோடியில் அமைகிறது
விபத்துகளை தடுக்க சுரங்கப்பாதை மதுராந்தகத்தில் ரூ.22 கோடியில் அமைகிறது
ADDED : ஜூன் 28, 2024 12:35 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மோச்சேரி, கருணாகரவிளாகம், அருந்ததிபாளையம், புதுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இப்பகுதி சாலையை கடந்து, மதுராந்தகம் மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 20 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இரு மாதங்களுக்கு முன், மதுராந்தகம் அருகே நடந்த விபத்தில் 12 பேர் இறந்தனர்.
இப்பகுதியில் விபத்தை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில், மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை - மோச்சேரி இடையே சுரங்கப்பாதை அமைக்க முடிவாகி உள்ளது.
இப்பணிக்காக 22.39 கோடி ரூபாயை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கி உள்ளது.
இந்த சுரங்கப்பாதையில், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்றுவரும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
'டெண்டர்' விடப்பட்டு, இப்பணியை உடனடியாக துவக்கி, ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

