ADDED : ஆக 25, 2024 12:14 AM
பொது
நுால் வெளியீட்டு விழா
இலக்கிய சோலை சார்பில் நுால் வெளியீட்டு விழா, காலை 10:00 மணி, இடம்: கே.வி.டி., பன்னோக்கு மருத்துவமனை உள் அரங்கம், எத்திராஜ் சாமி சாலை, எருக்கஞ்சேரி.
கிருஷ்ண தரிசனம் கண்காட்சி
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில், 'கிருஷ்ண தரிசனம்' விற்பனை கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை மற்றும் பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை.
சொற்பொழிவு
திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில், 'திருப்புகழ்' தொடர் சொற்பொழிவு நேரம், நிகழ்த்துபவர் மா.கி.ரமணன், நேரம் காலை 10:00 மணி, இடம்: ஸ்ரீபால சுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25, கிராமத் தெரு, திருவொற்றியூர்.
எம்.கே.பிரபாகரின் திருத்தொண்டர் புராணம் சொற்பொழிவு, மாலை 3:30 மணி. இடம்: சித் சபா மணிக்கூடம், 4வது தெரு, மல்லிகேஸ்வரர் நகர், பள்ளிக்கரணை.
பரிசளிப்பு விழா
விவேக சேவா இன்டர்நேஷனல் சார்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உடையலங்கார போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா, காலை 9:30 மணிக்கு இடம்: ஸ்ரீ ரஞ்சனி ஹால், 15வது தெரு, நங்கநல்லுார். சென்னை.
கொடியேற்றம்
பரஞ்சோதி ஞானஒளி மகான் பிறந்த நன்னாள் விழா, சுவாமி அருளாசி. சிறப்புரை: எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன். காலை 9:15 மணி. இடம்: பரஞ்ஜோதி ஞானஒளி யக்ஞ பீடம், மத்திய பீடம், என்.எஸ்.சி., போஸ் சாலை, ராமகிருஷ்ணாபுரம், கிழக்கு தாம்பரம். தொடர்புக்கு 94448 04345
பரதநாட்டியம்
செல்வி கீர்த்தி கணேசன் குழுவினரின் பரதநாட்டியம், மாலை 5:30 மணி. இடம்: எம்.எம். மஹால், 147, பி.எச்., கப்பல்போலு தெரு, சஞ்சீவினி மருத்துவமனை எதிரில், பழைய வண்ணாரப்பேட்டை.
ஆன்மிகம்
உழவாரப்பணி
நாகராஜன் தலைமையிலான ஆலய தொண்டு சீர் திருக்கூட்டத்தின் சிவ பணி. காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: காரணீஸ்வர் கோவில், சைதாப்பேட்டை.
விஜயா சுவாமிநாதன் தலைமையிலான சிவலோகநாதன் உழவாரப்பணி மன்றத்தின், 48வது மாத உழவாரப் பணி. காலை 9:00 மணி முதல். இடம்: வைத்தியநாதர் கோவில், வலத்தான்சேரி.
கூட்டு வழிபாடு
வேணுகோபால் தலைமையிலான நமச்சிவாய சாரிடபிள் டிரஸ்டின், 265வது மாத பணி - காலை 7:00 மணி முதல். அறக்கொடியோன் கயிலாய வாத்திய இசை, கூட்டு வழிபாடு - மாலை 4:00 மணி. இடம்: பெருமாள்பட்டு.
சஷ்டி வழிபாடு
சிறப்பு அபிஷேகம், காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:00 மணி. கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், இ.சி.ஆர்., நீலாங்கரை.
கருடசேவை
ஸ்ரீ பாதம் தாங்கிகள் சங்கம் சார்பில், 13ம் ஆண்டு ஸ்ரீஜெயந்தி மகோத்சவ பத்திரிகை, காலை 6:00 மணி. கருடசேவை திருவீதி புறப்பாடு, இரவு 8:30 மணி. இடம்: ஸ்ரீ சுப்ரணிய சுவாமி கோவில் சிவா விஷ்ணு கோவில், பிருந்தாவன் நகர், ஆதம்பாக்கம்.
இன்னிசை நிகழ்ச்சி
ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி சத் சங்கம் சார்பில் மாலை 6:30 மணி இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.