/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ம.நீ.ம.,வின் 1.03 லட்சம் ஓட்டு கைப்பற்றுவதில் கடும் போட்டி
/
ம.நீ.ம.,வின் 1.03 லட்சம் ஓட்டு கைப்பற்றுவதில் கடும் போட்டி
ம.நீ.ம.,வின் 1.03 லட்சம் ஓட்டு கைப்பற்றுவதில் கடும் போட்டி
ம.நீ.ம.,வின் 1.03 லட்சம் ஓட்டு கைப்பற்றுவதில் கடும் போட்டி
ADDED : மார் 25, 2024 12:39 AM
திருவொற்றியூர்:வட சென்னை லோக்சபா தொகுதியில், 2019ல் போட்டியிட்ட தி.மு.க.,வின் கலாநிதி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., கூட்டணி தே.மு.திக., வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை, 4.61 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
அந்த தேர்தலில், ம.நீ.ம., சார்பில் போட்டியிட்ட, முன்னாள் காவல் துறை அதிகாரி மவுரியா, 1.03 லட்சம் ஓட்டுகள் பெற்று, மூன்றாமிடம் பிடித்தார். இது, மொத்தம் பதிவான ஓட்டுகளில், 10.8 சதவீதம்.
இதற்கு கமல் ஒரு காரணம் என்றாலும், நட்சத்திர வேட்பாளராக களம் இறக்கப்பட்ட, முன்னாள் காவல் துறை அதிகாரி மவுரியாவும் மிக முக்கிய காரணம்.
ஏனெனில், அவர் காவல் துறை அதிகாரியாக பணியாற்றிய காலக்கட்டங்களில், வடசென்னை மக்களுக்கு நன்கு அறிந்தவராக இருந்தார். அதன் காரணமாக, ம.நீ.ம., மூன்றாமிடம் பிடித்தது.
இம்முறை, லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் ம.நீ.ம., கை கோர்த்துள்ளது. அதனால், முன்பு வாங்கிய ஓட்டுகளை, தி.மு.க.,வுக்கு சாதகமாக மாற்ற அக்கட்சியினர் ஈடுபாடு காட்டுவரா என, தி.மு.க.,வினர் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் அ.தி.மு.க.,வினர், 'கடந்த முறை அ.தி.மு.க., நேரடியாக களம் காணாததால், அதிருப்தியில் இருந்த நாங்கள் ம.நீ.ம., - நா.த.க.,வுக்கு ஓட்டளித்தோம். ஆனால் இம்முறை, நேரடியாக அ.தி.மு.க.,வே நிற்பதால், ம.நீ.ம., வாங்கிய ஓட்டுகளை உடைத்து, நிச்சயம் கைப்பற்றுவோம்' என்கின்றனர்.
ம.நீ.ம.,வின் லட்சம் ஓட்டு, யாருக்கு சாதமாக அமைய போகிறது என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

